செய்திகள்

22 கல்லூரிகள் பங்கேற்கும் தென்இந்திய கால்பந்து போட்டி

Published On 2017-02-23 10:11 GMT   |   Update On 2017-02-23 10:11 GMT
18-வது மர்பி நினைவு தென்இந்திய கல்லூரிகள் கால்பந்து போட்டி வருகிற 25-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை சென்னையில் நடக்கிறது.
சென்னை:

லயோலா கல்லூரி சார்பில் மர்பி நினைவு கல்லூரிகள் கால்பந்து போட்டி சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 18-வது மர்பி நினைவு தென்இந்திய கல்லூரிகள் கால்பந்து போட்டி வருகிற 25-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் லயோலா, செயின்ட் ஜோசப்ஸ் (திருச்சி), பி.எஸ்.எம்.ஒ கல்லூரி, நிர்மலா கல்லூரி (கேரளா) பால்வின் கல்லூரி (பெங்களூர்) போன்ற முன்னணி அணிகள் உள்பட 22 கல்லூரிகள் பங்கேற்கின்றன.

‘லீக்’ மற்றும் நாக்அவுட் முறையில் இந்தப்போட்டி நடக்கிறது. சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். 2-வது, 3-வது, 4-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7,500, ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை லயோலா கல்லூரி முதல்வர் எம்.ஆரோக்யசாமி சேவியர் தெரிவித்துள்ளார்.

Similar News