செய்திகள்

17 போட்டிகளில் 1000 ரன்கள்: கேப்டன் விராட் கோலி சாதனை

Published On 2017-01-22 19:20 GMT   |   Update On 2017-01-22 19:20 GMT
இந்திய அணியின் விராட் கோலி கேப்டனாக இருந்து வெறும் 17 போட்டிகளில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை புரிந்துள்ளார்.
கொல்கத்தா:

விராட் கோலி இந்திய அணியின் தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் என அனைத்து தரப்பு போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்து வருகிறார். 

இந்நிலையில்,  விராட் கோலி கேப்டனாக இருந்து வெறும் 17 போட்டிகளில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுவில்லியர்ஸ் சாதனையை அவர் முறியடித்துள்ளார். டிவில்லியர்ஸ் 18 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். 

இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் 21 போட்டிகளிலும், வில்லியம்ஸ் 20 போட்டிகளிலும் இந்த சாதனையை நிகழ்ச்சியை நிகழ்த்தி இருந்தனர்.

முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி 55 ரன்கள் எடுத்து இருந்தார். இந்த தொடரில் முதல் போட்டியில் கோலி 122 ரன்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News