செய்திகள்

வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு

Published On 2016-12-23 11:42 GMT   |   Update On 2016-12-23 11:42 GMT
18 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பெண்கள் அணி வீராங்கனைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
பாங்காக்கில் 18 வயதிற்குட்பட்டோருக்கான 4-வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் இந்தியா 3-0 என வெற்றிப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. ரித்து முதல் கோல் அடிக்க, அடுத்த இரண்டு கோல்களையும் சிங்கிதா குமாரி அடித்தார்.

இந்த வெற்றியைத் தேடித்தந்த வீராங்கனைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. அதைப்போல் அணியின் அதிகாரிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News