செய்திகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: வார்னர் 97 ரன்னில் அவுட்

Published On 2016-11-04 05:01 GMT   |   Update On 2016-11-04 05:01 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.வார்னர் 97 ரன்னில் ஸ்டெயின் பந்தில் அவுட் ஆனார்.

பெர்த்:

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த்தில் தொடங்கியது.

டாஸ் ஜெயித்து முதல் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 242 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக டிகாக் 84 ரன் எடுத்தார். மிச்செல் ஸ்டாக் 4 விக்கெட்டும், ஹசல்பும் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பாக தொடக்கம் கிடைத்தது. டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 21 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 105 ரன் எடுத்து வார்னர் 73 ரன்னுடனும், ஷான் மார்ஷ் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. வார்னர்-மார்ஷ் ஜோடி பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தது. ஷான் மார்ஷ் அரை சதம் அடித்தார். வார்னர் சதத்தை நெருங்கி கொண்டிருந்தார். ஆனால் அவர் 97 ரன்னில் ஸ்டெயின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்தனர். அடுத்து கவாஜா களம் வந்தார்.

இந்த ஜோடி நிலைத்து நிற்கவில்லை. ரபடா பந்தில் கலாஜா (4 ரன்) போல்டு ஆனார்.

Similar News