செய்திகள்

இளம் வீரர்களுக்கு உதவுவது எனது கடமை: மிஸ்ரா சொல்கிறார்

Published On 2016-10-22 15:59 GMT   |   Update On 2016-10-22 16:12 GMT
சீனியர் சுழற்பந்து வீச்சாளர் என்ற அடிப்படையில் இளம் பந்து வீச்சாளர்களுக்கு டிப்ஸ்கள் வழங்குவது எனது கடமை என்று மிஸ்ரா கூறியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நாளை மொகாலியில் 3-வது போட்டி நடைபெற இருக்கிறது.

இந்தியா தொடர்ந்து அதிக அளவில் டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், ஜடேஜாவிற்கு இந்த ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மிஸ்ரா இந்தியாவின் அனுபவ சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார். இவர் இரண்டு போட்டிகளிலும் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், தனது அனுபவம் இளம் வீரர்களுக்கு உதவ சிறந்ததாக இருக்கிறது என்று மிஸ்ரா கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் அவர் கூறுகையில் ‘‘இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அனுபவம் சிறந்த வகையில் உதவ காரணமாக இருக்கிறது. அவர்கள் யாரேனும் என்னிடம் பந்து வீச்சு குறித்து கேட்டால், நான் டிப்ஸ் வழங்குவேன். போட்டியின்போது நாங்கள் கூடி பேசும்போது உதவி கேட்டால், என்னால் என்ன முடியுமோ? அந்த அவர்களுக்கு வழங்குவேன். இந்த பணியால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இளம் வீரர்களுக்கு உதவி வழங்குவது என்னுடைய பணி என்று கருதுகிறேன்’’ என்றார்.

Similar News