செய்திகள்

2-வது ஒருநாள் கிரிக்கெட்: 4 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா திணறல் - 26 ஓவருக்கு 108 ரன்கள

Published On 2016-10-20 14:12 GMT   |   Update On 2016-10-20 14:12 GMT
243 ரன்களை சேஸிங் செய்து வரும் இந்தியா 26 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் (118) சதத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அதன்பின் வந்த விராட் கோலி 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். விராட் கோலியை அடுத்து ரகானே (28), மணீஷ் பாண்டே (19) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 19.2 ஓவரில் 73 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் டோனியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். 26 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. டோனி 15 ரன்னுடனும், கேதர் ஜாதவ் 20 ரன்னுடனும் விளையாடி வருகிறார்கள்.

Similar News