செய்திகள்

2026–ம் ஆண்டு ஆசிய விளையாட்டு ஜப்பானில் நடக்கிறது

Published On 2016-09-25 18:38 GMT   |   Update On 2016-09-25 18:38 GMT
2026–ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமத்தை ஜப்பான் தட்டிச்சென்றுள்ளது.
தனாங்:

ஆசிய விளையாட்டு போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 18–வது ஆசிய போட்டி 2018–ம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகர்த்தா, பாலெம்பாங் நகரங்களிலும், 2022–ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவ் நகரத்திலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் 2026–ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் உரிமத்தை ஜப்பான் தட்டிச்சென்றுள்ளது. அங்குள்ள ஏய்ச்சி பிரிபெக்சர் மற்றும் நகோயா ஆகிய நகரங்களில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே 2020–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியும் ஜப்பானில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News