செய்திகள்

டெஸ்டில் நம்பர்-1 அணி: ஐ.சி.சி. தலைவரிடம் இருந்து கதாயுதத்தை பெற்றார் மிஸ்பா

Published On 2016-09-22 04:33 GMT   |   Update On 2016-09-22 04:33 GMT
பாகிஸ்தான் அணி இங்கிலாந்து தொடர் முடிந்த பின்னர் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது. இதனால் ஐ.சி.சி. வழங்கிய கதாயுதத்தை மிஸ்பா பெற்றார்.
டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடிக்கும் அணியை ஐ.சி.சி. கதாயுதம் வழங்கி கவுரவிக்கும். அந்த வகையில் இங்கிலாந்து தொடரின்போது பாகிஸ்தான் அணி ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது.

2003-ம் ஆண்டு ஐ.சி.சி. தரவரிசை பட்டியலை அறிமுகப்படுத்தியது. அதில் இருந்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது கிடையாது. தற்போதுதான் முதனமுறையாக முதல் இடத்தை பிடித்தது.

இங்கிலாந்து தொடரை பாகிஸ்தான் 2-2 என சமநிலைப் படுத்தியது. இதேவேளையில் ஆஸ்திரேலியா இலங்கை அணியிடம் 0-3 என தோல்வியடைந்தது. மழையின் காரணமாக இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடரை 3-0 என வெல்ல முடியாமல், 2-0 என வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தான் இந்தியாவை விட ஒரு புள்ளி அதிகம் பெற்றது.

ஐ.சி.சி.யின் தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் மிஸ்பா உல் ஹக்கிம் டெஸ்ட் கதாயுதத்தை வழங்கினார். இந்த விழா லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது.

Similar News