செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், நடால் 2-வது சுற்றுக்கு தகுதி

Published On 2016-08-30 07:38 GMT   |   Update On 2016-08-30 07:38 GMT
நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் மற்றும் ரபெல் நடால் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
நியூயார்க்:

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா), முதல் சுற்றில் போலந்து வீரர் ஜெர்சி ஜானோவிச்சை எதிர்கொண்டார்.

இதில் ஜோகோவிச் 6-3, 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

4-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணககில் உஸ்பெகிஸ்தான் வீரர் டென்ஸ் இஸ்டோமினை வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் ராபர்ட் வின்சி (இத்தாலி), சிலிச் (குரோஷியா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), சோங்கா (பிரான்ஸ்), ரோனிக் (கனடா) ஆகிய முன்னணி வீரர்கள் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான முகுருஜா (ஸ்பெயின்) 2-6, 6-0, 6-3 என்ற கணக்கில் மெர்டன்சை (பெல்ஜியம்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இரண்டாம் நிலை வீராங்கனையான கெர்பர் (ஜெர்மனி) 6-0, 1-0 என்ற கணக்கில் பொலோனோவுக்கு (சுலோவாக்கியா) எதிராக முன்னிலையில் இருந்தபோது பொலோனோ காயத்தால் விலகினார். இதனால் முகுருஜா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

Similar News