செய்திகள்

தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து மோதல்

Published On 2016-08-27 05:51 GMT   |   Update On 2016-08-27 05:51 GMT
தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.


வில்லியம்சின் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரில் டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. மழையால் 3 நாள் ஆட்டம் ரத்து ஆனது.

தென் ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தொடரை கைப்பற்ற இரு அணிகளும் வெற்றி பெற போராடும். இதனால் இந்த டெஸ்ட் விறுவிறுப்பாக இருக்கும்.

இது இரு அணிகளும் மோதுகிற 42-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 41 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 23 டெஸ்டிலும், நியூசிலாந்து 4 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 14 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

Similar News