செய்திகள்

குறைந்த போட்டியில் 50 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முரளிதரன் சாதனையை முறியடித்த பெரேரா

Published On 2016-08-06 15:15 GMT   |   Update On 2016-08-06 15:15 GMT
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா 11 போட்டிகளில் 50 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முரளீதரன் சாதனையை முறியடித்துள்ளார்.
இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலேயில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதற்கு இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆன தில்ருவான் பெரேரா முக்கிய காரணமாக திகழ்ந்தார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 2-வது இன்னி்ங்சில் அரை சதம் அடித்ததுடன் 6 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

34 வயதாகும் தில்ருவான் பெரேராவிற்கு இது 11-வது டெஸ்ட் போட்டியாகும். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தியபோது 49 விக்கெட்டுக்கள் எடுத்திருந்தார். 2-வது இன்னிங்சில் பர்ன்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் குறைந்த போட்டியில் 50 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பெரேரா 11 போட்டியில் விளையாடி 55 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன் அஜந்தா மெண்டிஸ் 12 போட்டிகளில் 50 விக்கெட் என்ற இலக்கை எட்டியிருந்தார். டெஸ்டில் 800 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஜாம்பவான் முரளிதரன், சமித்தா வாஸ், மலிங்கா ஆகியோர் 13 போட்டிகளில்தான் 50 விக்கெட்டுக்களை தொட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News