செய்திகள்

புட்சால்: இறுதிப்போட்டியில் கொச்சி-மும்பை

Published On 2016-07-23 21:50 GMT   |   Update On 2016-07-23 21:50 GMT
புட்சால் கால்பந்து போட்டியில் கொச்சி மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
கோவா:

முதலாவது பிரீமியர் புட்சால் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. நேற்று அரைஇறுதி ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் கொச்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் மும்பை அணி 4-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி சுற்றை எட்டியது. மும்பை அணியில் ஏஞ்சலோட், 'ஹாட்ரிக்' கோல் அடித்து கலக்கினார்.

இன்றிரவு 8 மணிக்கு நடக்கும் இறுதி ஆட்டத்தில் கொச்சி-மும்பை அணிகள் மோதுகின்றன.

Similar News