இந்தியா

கொரோனா தடுப்பூசி 

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 208 கோடியை தாண்டியது

Published On 2022-08-14 16:56 GMT   |   Update On 2022-08-14 16:56 GMT
  • 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 3.97 கோடி குழந்தைகளுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டது.
  • 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை 3.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்கள் வழங்கப்பட்டன.

கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி இயக்கம் கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. நாட்டில் அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை இன்று( 14.08.2022) 208.21 கோடியைத் தாண்டியுள்ளது.

இரவு 7 மணி வரை 18 வயது முதல் 59 வயதுடையவர்களுக்கு 16,24,241 முன்னெச்சரிக்கை டோஸ்கள் வழங்கப்பட்டன. இந்த வயதினருக்கு வழங்கப்பட்ட மொத்த முன்னெச்சரிக்கை டோஸ்களின் எண்ணிக்கை இதுவரை 6,68,15,334 ஐ எட்டியுள்ளது

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை 3.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட 3.97 கோடி குழந்தைகளுக்கு முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது,

அதே சமயம் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 6.14 கோடி இளம் பருவத்தினருக்கு முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News