இந்தியா

திருப்பதி கோவிலில் உண்டியலில் போடப்பட்ட கைக்கடிகாரங்கள் 18-ந் தேதி ஏலம்

Published On 2022-08-04 04:47 GMT   |   Update On 2022-08-04 04:47 GMT
  • திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்திய கைக்கடிகாரங்கள் வரும் 18-ந் தேதி ஏலம் விடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
  • மற்ற விவரங்களுக்கு திருமலை திருப்பதி மார்கெட்டிங் அலுவலகம், திருப்பதி என்ற முகவரிக்கு அலுவலக நேரத்தில் 0877-2264429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

திருப்பதி:

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் பக்தர்கள் உண்டியலில் நன்கொடையாக அளித்த கைக்கடிகாரங்கள் வரும் 18-ந் தேதி மாநில அரசின் கொள்முதல் இணையத்தில் மின்னணு ஏலம் விடப்படும்.

இதில் சீகோ, எச்எம்டி, டைடன், சோனி, கசீயோ, டைமேக்ஸ், ஆல்வின், சோனோடா, டைம்வேல், பாஸ்ட் ட்ரேக், சிட்டிசன், ரோலக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் கைக்கடிகாரங்கள் உள்ளது. மொத்தம் 22 புதிய, பயன்படுத்தப்பட்ட மற்றும் லேசாக சேதமடைந்த கைக்கடிகாரங்கள் ஏலம் விடப்படும்.

மற்ற விவரங்களுக்கு திருமலை திருப்பதி மார்கெட்டிங் அலுவலகம், திருப்பதி என்ற முகவரிக்கு அலுவலக நேரத்தில் 0877-2264429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தேவஸ்தான இணையதளம் www.tirumala.org அல்லது மாநில அரசு இணையதளம் www.konugolu.ap.gov.in . என்ற இணையத்தில் விவரங்களை அறியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News