இந்தியா

உ.பி சித்ரகூட் பகுதியில் தக்காளி ஏற்றி வந்த வாகனம் மோதி 6 பேர் பலி

Published On 2022-07-09 09:29 GMT   |   Update On 2022-07-09 09:29 GMT
  • விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி.
  • உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் வேகமாக வந்த வாகனம் மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து சித்ரகூட் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைலேந்திர ராய் கூறியதாவது:-

சித்ரகூட் மாவட்டம் ரவுலி கல்யாண்பூர் கிராமத்தில் இன்று காலை 6.30 மணியளவில் தக்காளி ஏற்றி வந்த வாகனம் சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த 8 பேர் மீது வேகமாக மோதியது.

இதில் நரேஷ் (35), அரவிந்த் (21), ராம்ஸ்வரூப் (25), சக்கா (32), சோம்தத் (25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பானுபிரதாப் (32) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பகவன்தாஸ் (45), ராம்நாராயண் (50) ஆகியோர் கவலைக்கிடமாக உள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பண்டா மாவட்டத்தில் உள்ள ஜாரி கிராமத்தில் வசிக்கும் ரௌலி கல்யாண்பூர் கிராமத்திற்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிபதி சுப்ரந்த் சுக்லா தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார் என்று அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News