இந்தியா

கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ்ராஜை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்

Published On 2023-09-11 09:49 GMT   |   Update On 2023-09-11 11:20 GMT
  • ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
  • எதிர்ப்பை மீறி நேற்று பிரகாஷ் ராஜ் கலபுரகிக்கு வந்தார்.

பெங்களூரு:

பிரபல கன்னட நடிகரான பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக தனது சமூக வலைதள பக்கங்களில் பரபரப்பு கருத்து தெரிவித்து வருகிறார்.

நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்தார். இதற்கு பல்வேற தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனில் உள்ள எஸ்.எம்.பண்டிட் தியேட்டரில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று அங்கு வந்தார்.

அப்போது தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் கலபுரகிக்கு வரக்கூடாது என்றும், மீறி வந்தால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் என்றும் இந்து விழிப்புணர்வு சேனா அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த எதிர்ப்பையும் மீறி நேற்று பிரகாஷ் ராஜ் கலபுரகிக்கு வந்தார். இதை கண்டித்து இந்து விழிப்புணர்வு சேனா அமைப்பினர் கருப்புக்கொடிகளை காட்டி போராட்டம் நடத்தினர். அவர்களை ஜகத் சர்க்கிளில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News