இந்தியா

திருட்டு பட்டம் சுமத்தி தாக்கியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-10-10 04:47 GMT   |   Update On 2022-10-10 04:47 GMT
  • அவமானம் அடைந்த கோமலேஸ்வரி அதே பகுதியில் உள்ள தனது பாட்டி பானம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.
  • அவரது பாட்டி பானம்மா மற்றும் உறவினர்கள் கோமலேஸ்வரியை மீட்டு ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம், ரத்நாலு குண்டா பகுதியை சேர்ந்தவர் கோமலேஸ்வரி (வயது 17). இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தாய் பத்மாவதி அரவணைப்பில் இருந்து வந்தார். கோமலேஸ்வரி ஏலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்டர்மீடியேட் படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோமலேஸ்வரி பக்கத்து வீட்டில் உள்ள நாய்க்குட்டியை பார்ப்பதற்காக சென்றார். இரவு நேரத்தில் கோமலேஸ்வரி வீட்டிற்கு வந்ததை கண்ட கணவன், மனைவி எங்கள் வீட்டில் இரவு நேரத்தில் திருடுவதற்கு வந்தாயா என கூறி கல்லூரி மாணவியை ஆபாசமாக திட்டி தாக்கினர்.

இதனால் அவமானம் அடைந்த கோமலேஸ்வரி அதே பகுதியில் உள்ள தனது பாட்டி பானம்மா வீட்டிற்கு சென்று அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

இதனைக் கண்ட அவரது பாட்டி பானம்மா மற்றும் உறவினர்கள் கோமலேஸ்வரியை மீட்டு ஏலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கோமலேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏலூர் போலீசில் பத்மாவதி புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவி சாவுக்கு காரணமான கணவன், மனைவி இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News