இந்தியா

அரபிக் கடலில் 400 கிலோ எடையுள்ள மீன் சிக்கியது

Published On 2023-12-26 04:52 GMT   |   Update On 2023-12-26 04:52 GMT
  • மீனவர்கள் சிறிய அளவிலான மீன்களை சந்திப்பது வழக்கம்.
  • விஞ்ஞான ரீதியாக இந்த மீன் பில்பிஷ் என்று அழைக்கப்படுகிறது.

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள மல்பே மீன்பிடித் துறைமுகத்தில் அரபிக் கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் 400 கிலோ எடையுள்ள பெரிய மீன் பிடிபட்டது.

மீனவர்கள் சிறிய அளவிலான மீன்களை சந்திப்பது வழக்கம். இருப்பினும், இவ்வளவு பெரிய மீன் வலையில் விழுவது மிகவும் அரிது.

விஞ்ஞான ரீதியாக இந்த மீன் பில்பிஷ் என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் மொழியில் இது மடல் மீன் அல்லது கட்டெகொம்பு மீன் என்று அழைக்கப்படுகிறது.அரிய வகைமீன் என்பதால் ஏராளமானோர் அதனை கண்டு ரசித்து பார்த்தனர்.

Tags:    

Similar News