இந்தியா

(கோப்பு படம்)

தீபாவளி பண்டிகையையொட்டி 11 வழித்தடங்களில் சிறப்பு ரெயில் சேவை- தெற்கு ரயில்வே முடிவு

Published On 2022-10-18 13:15 GMT   |   Update On 2022-10-18 13:15 GMT
  • ஏற்கனவே 179 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இருக்கைகள் முன்பதிவின்போது முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முதல் வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை வரை, பொதுமக்கள் எளிதான, வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் 211 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

தர்பங்கா, அசம்கர், சகர்சா, பகல்பூர், முசாபர்பூர், ஃபிரோஸ்பூர், பாட்னா, கதிஹார் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட வழித்தடங்களில் இரு புறமும் மொத்தம் 2,561 முறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தெற்கு ரெயில்வே மட்டும் 11 வழித்தடங்களில் 56 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது.

ஏற்கனவே மொத்தம் 179 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரெயில்களில் இருக்கைகள் முன்பதிவின்போது முறைகேடுகளில் ஈடுபடுதல், அதிக கட்டணம் வசூலித்தல் போன்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகளை பயணிப்பதை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையில் ரெயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பண்டிகை காலங்களில் ரெயில் நிலையங்களில் கூட்டத்தை சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரெயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News