இந்தியா

முதல் மந்திரி பினராயி விஜயன்

கருணாநிதி நினைவு தினம் - தமிழில் அஞ்சலி செலுத்திய முதல் மந்திரி பினராயி விஜயன்

Published On 2022-08-07 06:56 GMT   |   Update On 2022-08-07 06:56 GMT
  • ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைதி ஊர்வலம் தொடங்கியது.
  • இந்த ஊர்வலம் மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது.

திருவனந்தபுரம்:

தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.

கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியின் நிறைவில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News