இந்தியா

வெளிநாடுகளுக்கு தகவல்கள் கடத்தல்- 348 செல்போன் செயலிகள் முடக்கம்

Published On 2022-08-04 02:52 GMT   |   Update On 2022-08-04 02:52 GMT
  • செல்போன் உபயோகப்படுத்துகிறவர்கள், அதன் செயலிகளில் தங்களைப்பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டியதாகிறது.
  • 348 செல்போன் செயலிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கி உள்ளது.

புதுடெல்லி:

செல்போன் உபயோகப்படுத்துகிறவர்கள், அதன் செயலிகளில் தங்களைப்பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டியதாகிறது. இப்படிப்பட்ட தகவல்களை அங்கீகாரமற்ற முறையில் நமது நாட்டுக்கு வெளியே உள்ள (வெளிநாடுகளில் உள்ள) சர்வர்களுக்கு சில செயலிகள் கடத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதாக அடையாளம் காணப்பட்டுள்ள 348 செல்போன் செயலிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கி உள்ளது.

இந்த தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் நேற்று அளித்த பதிலில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் ராஜாங்க மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் இது மீறிய செயல் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்டுள்ள 348 செயலிகளும் எவ்வளவு காலத்துக்கு முடக்கி வைக்கப்பட்டிருக்கும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

Tags:    

Similar News