இந்தியா
மீட்பு பணி

ஜம்மு காஷ்மீர் சுரங்க விபத்து- 9 உடல்கள் மீட்பு

Published On 2022-05-21 12:32 GMT   |   Update On 2022-05-21 12:58 GMT
கடந்த வியாழக்கிழமை இரவு சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர்  மாநிலம் ரம்பன் மாவட்டம், கூனி நல்லா பகுதி அருகே சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது.  கடந்த வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதியானது திடீரென இடிந்து விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் மீட்பு பணியை தொடங்கினர்.

மீட்பு பணியின்போது 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், இன்று மீண்டும் மீட்புப்பணிகள் தொடங்கியது.

இந்த மீட்பு பணியின்போது  மொத்தம் 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக
ராம்பன் பகுதி காவல்துறை அதிகாரி மொகிதா சர்மா தெரிவித்தார்.
மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

உயிரிழந்தவர்களில் 5 பேர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள், 2 பேர் நேப்பாளம், ஒருவர் அசாம், மேலும் 2 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்று அவர் விளக்கம் அளித்தார்.

இந்த விபத்தானது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கவலை தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News