இந்தியா
லாரியில் மோதிய கார் தீப்பிடித்து எரிந்த காட்சி

லாரியில் மோதி கார் தீப்பிடித்து எரிந்து- 3 பேர் பலி

Update: 2022-05-18 09:00 GMT
திருப்பதி அருகே லாரியில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் பாக்கராபேட்டையை சேர்ந்தவர்கள் இம்ரான் (வயது21), பாலாஜி(21), தேஜா(29) 3 பேரும் காரில் மார்க்காபுரம் சம்பாணி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

ஜிப்பையாபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பஞ்சராகி எதிரே மீன் ஏற்றி வந்த லாரி மீது மோதியது.

இதில் திடீரென டேங்க் வெடித்து தீப்பித்தது.

இதில் கார் தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த 3 பேரும் தீயில் சிக்கி அலறி கூச்சலிட்டர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தீயில் சிக்கி இம்ரான், பாலாஜி, தேஜா ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News