இந்தியா
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்

Published On 2022-05-15 08:41 GMT   |   Update On 2022-05-15 08:41 GMT
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக உள்ள சுஷில் சந்திராவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இதற்கிடையே, இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமாரை நியமனம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ராஜீவ் குமார் புதிய தேர்தல் கமிஷனராக 15-ம் தேதி பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் 25-வது தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

இவரது தலைமையின் கீழ் 2024 பாராளுமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News