இந்தியா
தாஜ்மகால்

தாஜ்மகாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்

Published On 2022-05-13 05:12 GMT   |   Update On 2022-05-13 05:12 GMT
கொரோனா காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் மூடப்பட்டது.
அலகாபாத்:

17-ம் நூற்றாண்டின் முகலாய மன்னர் ஷாஜகானால் சலவைக்கற்கள் கொண்டு கட்டப்பட்ட தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.

இதற்கிடையே, தாஜ்மகாலில் மூடப்பட்ட 22 அறைகளின் கதவுகளைத் திறக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ரஜனீஷ் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தாஜ்மகால் கட்டிடம் ஒரு சிவன்கோவில். அது பற்றிய உண்மையைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும் ரகசிய அறைகளில் இந்து கடவுள் இருப்பதாக கூறி வழக்கு தொடுத்த மனுதாரருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

Tags:    

Similar News