இந்தியா
அமித் ஷா

மத்திய மந்திரி அமித்ஷாவின் மூன்று நாட்கள் அசாம் சுற்றுப்பயணம்

Update: 2022-05-09 07:34 GMT
நாளை கவுகாத்தியில் நடக்கும் விழாவில் பங்கேற்று அசாம் காவல்துறைக்கு அமித்ஷா விருது வழங்கவுள்ளார்.
கவுகாத்தி:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அசாமில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை நேற்று கவுகாத்தி விமான நிலையத்தில் சந்தித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் வரவேற்றனர். 

இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர், அம்மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா அரசின் ஓராண்டு நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். மேலும், வங்காள தேசம் எல்லைப்பகுதிக்கும் பயணம் செய்ய உள்ளார்.

இன்று மன்காசார் எல்லைப் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை சந்தித்து  அமித்ஷா கலந்துரையாட உள்ளார்.  தமுல்பூர் மாவட்டத்தில் உள்ள கெளஞ்சியில் மத்திய ஆயுத துணை ராணுவப் படை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் பங்கேற்பார்.  அடுத்ததாக, நாளை, கவுகாத்தியில் நடக்கும் விழாவில் பங்கேற்று அசாம் காவல்துறைக்கு அமித்ஷா விருது வழங்கவுள்ளார்.
Tags:    

Similar News