இந்தியா
கடத்தப்பட்ட கஞ்சா மூட்டைகள்

ஆந்திராவில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள 1,170 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2022-04-19 05:22 GMT   |   Update On 2022-04-19 05:22 GMT
அனகாபல்லியிலிருந்து விஜயவாடா வழியாக ஐதராபாத் நோக்கி வந்த டிரக் மூலம் கிலோ கணக்கில் கஞ்சா கடத்தி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் இருந்து சுமார் ரூ.2.33 கோடி மதிப்புள்ள 1169.3 கிலோ கஞ்சாவை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.

அனகாபல்லி மாவட்டம் கோபுரு அருகே தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் விபத்துக்குள்ளான மற்றும் கைவிடப்பட்ட நிலையில் லாரி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை நடத்தினர். அப்போது, லாரியில் மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதில் கடத்தல் பொருள் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அனகாபல்லியிலிருந்து விஜயவாடா வழியாக ஐதராபாத் நோக்கி வந்த டிரக் மூலம் கஞ்சா கடத்தி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, லாரியில் பதுக்கி வைத்திருந்த 1169.30 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது என்றும் இதன் மதிப்பு 2.33 கோடி என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்.. அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது
Tags:    

Similar News