இந்தியா
சுப்ரீம் கோர்ட்

தேர்தல் வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் இலவசம் வழங்குவதை தடுக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமி‌ஷன் பதில் மனு

Published On 2022-04-09 11:17 GMT   |   Update On 2022-04-09 11:17 GMT
அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசம் வழங்குவதை தடுக்க முடியாது. இலவச திட்டங்கள் உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது.

புதுடெல்லி:

தேர்தலின் போது அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்கிறது.

அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசம் அறிவிக்க தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையத்தின் பிராமாண பத்திரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக இலவசம் வழங்குவதை தடுக்க முடியாது. இலவச திட்டங்கள் உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது.

தேர்தலுக்கு முன்போ, பின்போ இலவசம் வழங்குவது சம்மந்தப்பட்ட கட்சியின் கொள்கை முடிவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News