இந்தியா
பெங்களூரு முன்னாள் போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ்

பதவி ராஜினாமா- ஆம் ஆத்மியில் இணையும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ்

Published On 2022-04-04 03:29 GMT   |   Update On 2022-04-04 03:29 GMT
கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி அறிமுகப்படுத்தும் முதல் வேட்பாளர் பாஸ்கர் ராவ் என்றும் இவர் பெங்களூரு பசவனகுடி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபில் காலூன்றிய ஆம் ஆத்மி அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் தனது கவனத்தை திருப்பியுள்ளது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், பெங்களூருவின் போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று ஆம் ஆத்மியில் இணைய உள்ளார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் பாஸ்கர் ராவ் ஆம் ஆத்மியில் இணைகிறார்.   

கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி அறிமுகப்படுத்தும் முதல் வேட்பாளர் பாஸ்கர் ராவ் ஆவார் என்றும் இவர் பெங்களூரு பசவனகுடி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஸ்கர் ராவ் பெங்களூருவைச் சேர்ந்த உள்ளூர்வாசி என்பதால் ஆம் ஆத்மி கட்சியில் அவரது இருப்பு கட்சிக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்.. புச்சா படுகொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் - ஐ.நா.பொது செயலாளர் வலியுறுத்தல்
Tags:    

Similar News