இந்தியா
பாராளுமன்றம்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு 14-ம் தேதி கூடுகிறது

Published On 2022-03-08 22:01 GMT   |   Update On 2022-03-08 22:01 GMT
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நேற்று சந்தித்து உறுப்பினர்களுக்கான இருக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற்றது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. கடந்த மாதம் 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் மக்களவை, மாநிலங்களவை காலை 11 மணி முதல் ஒரே நேரத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News