இந்தியா
மும்பை பங்குச்சந்தை

சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை

Published On 2022-01-25 04:57 GMT   |   Update On 2022-01-25 06:20 GMT
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் அளவில் குறைந்து இன்று காலை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த ஐந்து நாட்களாக சரிந்த நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 57,491.51 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிவடைந்தது. இன்று காலை சுமார் 340 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் வர்த்தகத்தில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டது.

குறைவாக 56,409.63 புள்ளிகளுடன் வர்த்தகமானது. அதிகபட்சமாக 57,552.84 வரத்தகமானது. காலை 10.10 மணி நிலவரப்படி மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் 57,546.60 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை  சென்செக்ஸ் குறியீட்டு எண் 800 புள்ளிகள் வரை குறைந்து வர்த்தகமானதால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர்.

தேசிய பங்கு சந்தை நேற்று நிஃப்டி 17,149.10 குறியீட்டு புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று 17,001.55 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
Tags:    

Similar News