இந்தியா
கொரோனா வைரஸ் பரிசோதனை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

Update: 2022-01-18 04:16 GMT
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று விகிதம் 14.43 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 புதுடெல்லி:

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிடப்பட்டுள்ள  தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்  2,38,018  பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.  இது  நேற்றைவிட 20,071 குறைவாகும். 

கொரோனா சிகிச்சை பலன் இன்றி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 310 பேர் உயிரிழந்துள்ளனர்.  மொத்தம் 1,54,421 பேர் சிகிச்சைக்குப் பின்னர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.  17,36,626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று விகிதம்14.43 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News