இந்தியா
சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ்

ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 100 சதவீதம் உயர்வு - கேரளா சுகாதார மந்திரி

Published On 2022-01-11 17:41 GMT   |   Update On 2022-01-11 17:41 GMT
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,053 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,066 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 14.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50,053 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக திருவனந்தபுரத்தில்  அதிகபட்சமாக 2,200 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 1,478 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. திரிசூரில் 943 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், நேற்று வரை 345 ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. 155 பேர் குணமடைந்துள்ளனர். டெல்டா வகையால் எண்ணிக்கை உயருகிறது என தெரியவந்துள்ளது.

கேரளாவில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் இரண்டு வகையும் உள்ளன. ஒரே வாரத்தில் 100 சதவீதம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News