search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புனித் மிஸ்ரா
    X
    புனித் மிஸ்ரா

    அறிகுறி இல்லாதவர்களை பரிசோதனை செய்வதில் அர்த்தம் இல்லை- எய்ம்ஸ் பேராசிரியர்

    யாரையெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டுமோ அவர்களை தான் பரிசோதனை செய்ய வேண்டும் என புனித் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
    புது டெல்லி:

    இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா 3-வது அலையில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டும் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

     கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தும், அறிகுறி இல்லாதவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய தேவையில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நேற்று அறிவுறுத்தியிருந்தது.

    இதற்கு, அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்படாதா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்நிலையில் அறிகுறி இல்லாதவர்களை சோதனை செய்வதினால் எந்த அர்த்தமும் இல்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவ பேராசிரியர் புனித் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், யாரையெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டுமோ அவர்களை தான் பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறி இல்லாதவர்களை பரிசோதனை செய்வது இந்த கட்டத்தில் அர்த்தம் இல்லை. அப்படி பரிசோதனை செய்வது பீதியை தான் உண்டாகும் என விளக்கம் அளித்துள்ளார்.

    Next Story
    ×