இந்தியா
ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனை

நாடு முழுவதும் 4,033 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு

Published On 2022-01-10 04:20 GMT   |   Update On 2022-01-10 04:20 GMT
சிக்கிம் மாநிலத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் , 27 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காணப்படுகிறது.  
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 410 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இதன் மூலம் நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,033 ஆக அதிகரித்துள்ளது.   

மகாராஷ்டிராவில் நேற்று அதிகபட்சமாக 1,216 பேருக்கு ஒமைக்ரான் தொற்று காணப்பட்டது.  புதிதாக 207 பேருக்கும் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.  சிக்கிம் மாநிலத்தில் மட்டும் இதுவரை ஒருவருக்கு கூட ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 
Tags:    

Similar News