இந்தியா
டெல்லி காவல்துறையினர்

டெல்லியில் 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா

Published On 2022-01-10 02:41 GMT   |   Update On 2022-01-10 02:41 GMT
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,751 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: 

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  எனினும் முழு லாக்டவுன் கிடையாது என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் டெல்லி காவல்துறையை சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி  மற்றும் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 300 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 

டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் உள்பட அங்குள்ள அனைத்து பிரிவு காவல் நிலையங்களிலும் ஏராளமான காவல் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் புதிதாக 22,751 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. இது கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதிக்குப் பிறகு மிக அதிகம் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,179 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
Tags:    

Similar News