இந்தியா
கொரோனா சிகிச்சை வார்டு

டெல்லியில் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு... ஒரே நாளில் 10665 பேருக்கு தொற்று

Published On 2022-01-05 13:02 GMT   |   Update On 2022-01-05 13:02 GMT
டெல்லியில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பிவருகின்றன.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கிய நகரங்களில் தொற்று மிகவும் வேகத்தில் பரவுவது 3-வது அலை தொடங்கி விட்டதை காட்டுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பாதிப்பு நிலவரங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் 10665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது மே 12ம் தேதிக்கு பிறகு அதிக அளவிலான பாதிப்பாகும். இன்று 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் மருத்துவமனை படுக்கைகள் நிரம்பிவருகின்றன.

டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமலில் இருக்கும். அத்தியவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். மற்ற நாட்களில் இரவுநேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News