இந்தியா
பிரதமர் மோடி

மைக்ரோ நிதி வசூலை தொடங்கியது பா.ஜ.க.: 1000 ரூபாய் நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி

Published On 2021-12-25 13:09 GMT   |   Update On 2021-12-25 13:09 GMT
வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று முதல் தீனதயாள் உபாத்யாய் நினைவு நாளான பிப்ரவரி 11ம் தேதி வரை மைக்ரோ நன்கொடை இயக்கம் நடைபெறுகிறது.
புதுடெல்லி:

பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து மிகச்சிறிய அளவில் நிதி வசூல் செய்து, கட்சியை வலுப்படுத்தும் வகையில், ‘மைக்ரோ நன்கொடை இயக்கத்தை’ பா.ஜ.க. இன்று தொடங்கியது. நன்கொடை இயக்கத்தை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைத்தார். 

அப்போது தொண்டர்களிடையே பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள மக்களிடமிருந்து ரூ.5 முதல் ரூ.1000 வரை நன்கொடைகளை சேகரிக்குமாறு கேட்டுக்கொண்டார். 



வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று முதல் தீனதயாள் உபாத்யாய் நினைவு நாளான பிப்ரவரி 11ம் தேதி வரை மைக்ரோ நன்கொடை இயக்கம் நடைபெறும். இந்த நன்கொடை இயக்கத்தின் துவக்கமாக பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் தலா 1000 ரூபாய் நன்கொடையை நமோ செயலி மூலம் வழங்கினர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பாஜகவின் கட்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கி உள்ளேன். எப்போதும் தேசத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற நமது லட்சியமும், வாழ்நாள் முழுவதும் தன்னலமற்ற சேவை செய்யும் கலாச்சாரமும் நமது சிறிய நன்கொடையால் மேலும் வலுப்பெறும். பாஜகவை வலுவாக்க உதவுங்கள். இந்தியாவை வலிமையாக்க உதவுங்கள்.
Tags:    

Similar News