இந்தியா
திருப்பதி கோவில்

திருப்பதியில் இயற்கை வேளாண் பொருட்கள் மூலம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு

Published On 2021-12-21 08:55 GMT   |   Update On 2021-12-21 08:55 GMT
தெலுங்கானா மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் 330 கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிரிடும் பொருட்கள் முதலில் இயற்கை வேளாண்மை துறையின் சந்தை படுத்தல் துறையால் சேகரிக்கப்படும்.

திருப்பதி:

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி ஜவஹர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பயிர்களுக்கு ரசாயன உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாகவும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. ரசாயன உரத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அத்தகைய விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக முதல்வர் ஜெகன் மோகன் முன்னிலையில் ஆந்திரபிரதேச மாநில விவசாயிகள் மற்றும் இயற்கை வேளாண் துறையுடன் தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் கோ அடிப்படையிலான இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக பசு, காளைகள் தேவஸ்தான வழங்குகிறது. விவசாயம் மற்றும் அதை சார்ந்த வைக்கும் இவற்றை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பயனடைகின்றனர்.

இதேபோல் விவசாயிகளுக்கு மாடுகளை வழங்குவதன் மூலம் கோ அடிப்படையிலான இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இத்திட்டத்தின்கீழ் அறுவடை செய்யப்படும் வேர்க்கடலை வெல்லம் நாட்டு வெண்ணெய் அரிசி மற்றும் பிற பொருட்களை தேவஸ்தனம் விவசாயி ஆதார விலையில் வாங்குகிறது.

இந்த பொருட்களை கொண்டு ஏழுமலையான் கோவிலில் செய்யப்படும் நெய்வைத்தியம் மற்றும் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதை பக்தர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தெலுங்கு மாநிலங்களில் விவசாயிகளுக்கு இதுவரை 638 நாட்டு மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. சித்தூர் மாவட்டத்தில் 180 மாடுகள் 128 காளைகள் என 308 கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் 330 கால்நடைகள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிரிடும் பொருட்கள் முதலில் இயற்கை வேளாண்மை துறையின் சந்தை படுத்தல் துறையால் சேகரிக்கப்படும். பின்னர் பயிர் பொருட்களை சேமித்து பதப்படுத்துவதற்கு தேவையான மூலப் பொருட்களை தேவஸ்தானத்திற்கு வழங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்... அரசு ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி இன்று முதல் தொடக்கம்

Tags:    

Similar News