இந்தியா
கோப்புப்படம்

பாகிஸ்தான் படகில் வந்த ரூ.400 கோடி ஹெராயின் பறிமுதல்- குஜராத் கடலோர பகுதியில் சிக்கியது

Published On 2021-12-20 10:30 GMT   |   Update On 2021-12-20 10:30 GMT
ஹெராயினை பறிமுதல் செய்த அதிகாரிகள் படகில் வந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகமதாபாத்:

குஜராத் கடற்படை மற்றும் பயங்கரவாத ஒழிப்பு படையினர் குஜராத் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அல்-ஹிசைனி என்ற பெயரிலான படகு குஜராத் கடலோர பகுதிக்கு அத்துமீறி வந்தது. இதையடுத்து குஜராத் படையினர் அந்த படகை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

சோதனையின் போது அந்த படகில் ரூ.400 கோடி மதிப்பிலான 77 கிலோ ஹெராயின் போதை பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் அந்த படகு பாகிஸ்தான் நாட்டில் இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹெராயினை பறிமுதல் செய்த அதிகாரிகள் படகில் வந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News