இந்தியா
அகிலேஷ் யாதவ்

கங்கை நதி மாசுபட்டுள்ளதால் யோகி ஆதித்யநாத் புனித நீராடவில்லை: அகிலேஷ் யாதவ் கிண்டல்

Update: 2021-12-15 02:57 GMT
வாரணாசிக்கு மோடியின் வருகை தொடர்பாக, ‘முடிவை நெருங்குபவர்கள் வாரணாசிக்கு வருவார்கள்’ என்ற தனது கருத்துக்கும் அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
ஜான்பூர் :

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலில் புதிய கட்டிடங்களை நேற்று முன்தினம் திறந்துவைத்த பிரதமர் மோடி, கங்கை நதியில் புனித நீராடினார். இந்தநிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை ஒட்டி நடத்திவரும் சமாஜ்வாடி ரத யாத்திரையின் இடையில் ஜான்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘கங்கையில் புனித நீராடாத முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் எவ்வளவு புத்திசாலி பாருங்கள். அவர் ஏன் அதில் புனித நீராடவில்லை? ஏனென்றால், கங்கை மாசுபட்டிருப்பது அவருக்குத் தெரியும். நிதிதான் பாய்ந்ததே தவிர, நமது நதிகள் தூய்மையாகவில்லை’ என்றார். வாரணாசிக்கு மோடியின் வருகை தொடர்பாக, ‘முடிவை நெருங்குபவர்கள் வாரணாசிக்கு வருவார்கள்’ என்ற தனது கருத்துக்கும் அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

‘முதலில், காசி விஸ்வநாதர் கோவில் திட்டப்பணி, சமாஜ்வாடி ஆட்சிக்காலத்தில் தொடங்கியது என்பதை பா.ஜ.க. ஒத்துக்கொள்ளட்டும்’ என்றார் அவர்.
Tags:    

Similar News