இந்தியா
பரிசோதனை

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

Published On 2021-12-10 16:09 GMT   |   Update On 2021-12-10 16:09 GMT
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை:

உலகம் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. இந்த உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வைரஸ் பரவும் ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். 

இந்த பரிசோதனைகளில், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று 3 வயது குழந்தை உள்ளிட்ட 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள். இன்றைய பாதிப்பின்மூலம் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 17 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 32 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News