செய்திகள்
ஒவைசி

நமது வீரர்கள் இறந்து கொண்டிருக்கும்போது, டி20 கிரிக்கெட்டா?- பிரதமருக்கு ஒவைசி கேள்வி

Published On 2021-10-19 16:36 GMT   |   Update On 2021-10-19 16:36 GMT
நாட்டின் பிரதமர் மோடி பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சீனா ஊடுருவல் ஆகிய இரண்டு விசயங்கள் குறித்து பேசுவதே இல்லை என அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காஷ்மீர் பகுதியில் அதிகப்படியான என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை நடைபெற்ற சண்டையில் 9 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

மேலும், சீனா இந்திய எல்லையில் ஊடுருவல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.ஏம். தலைவர் அசாதுதீன் ஒவைசி பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். ஒவைசி நாட்டின் பல்வேறு விசயங்கள் குறித்து கூறுகையில் ‘‘பிரதமர் மோடி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, லாடாக் எல்லையில் சீனா ராணுவம் இந்திய எல்லைக்குள் அமர்ந்திருப்பது குறித்து மோடி ஒருபோதும் பேசுவதே இல்லை.

நமது ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். காஷ்மீரில் மக்கள் உயிருடன் பாகிஸ்தான் தினந்தோறும் 20-20 விளையாடிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் டி20 விளையாடுவீர்களா?’’ என்றார்.
Tags:    

Similar News