செய்திகள்
போக்குவரத்து நெரிசல்

பாரத் பந்த்: டெல்லி-குர்கான் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2021-09-27 06:10 GMT   |   Update On 2021-09-27 06:10 GMT
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் ஆங்காங்கே விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 'சம்யுக்தா கிசான் மோர்ச்சா' விவசாய சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள இப்போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அதிகாலை முதலே தலைநகர் டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் இன்று காலையில் டெல்லி-குர்கான் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 



இதேபோல் நாடு முழுவதும்  ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு, போக்குவரத்தை முடக்கி வருகின்றனர். 

Tags:    

Similar News