செய்திகள்
மாயாவதி

பஞ்சாப் முதல்-மந்திரி நியமனம்: காங்கிரசின் தேர்தல் நாடகம்- மாயாவதி குற்றச்சாட்டு

Published On 2021-09-21 03:06 GMT   |   Update On 2021-09-21 03:06 GMT
தலித் அல்லாத தலைவரின் தலைமையில்தான் சட்டசபை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. காங்கிரசின் இந்த இரட்டை வேடம் குறித்து உஷாராக இருக்க வேண்டும்.
லக்னோ :

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கும் பஞ்சாப்பில் காங்கிரஸ் அரசின் புதிய முதல்-மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுள்ளார். அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரசும், இதர கட்சிகளும் சிக்கலான நேரத்தில் மட்டுமே தலித்துகளை பற்றி நினைக்கும். சரண்ஜித்சிங் சன்னியின் நியமனம், காங்கிரசின் தேர்தல் நாடகம். இந்த நாடகத்தில் தலித்துகள் மயங்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

தலித்துகள் மீது காங்கிரசுக்கு இன்னும் நம்பிக்கை இல்லை. அதனால், தலித் அல்லாத தலைவரின் தலைமையில்தான் சட்டசபை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. காங்கிரசின் இந்த இரட்டை வேடம் குறித்து உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News