செய்திகள்
கொரோனா பரிசோதனை

பாதிப்பு விகிதம் சற்று குறைந்தது... கேரளாவில் இன்று 29,682 பேருக்கு கொரோனா

Published On 2021-09-04 16:53 GMT   |   Update On 2021-09-04 16:53 GMT
கேரளாவில் இன்று ஒரே நாளில் 142 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு 21,422 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. நேற்று 29,322 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்து, 29,682 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பாதிப்பு விகிதம் 17.91ல் இருந்து 17.54 சதவீதமாக குறைந்துள்ளது.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,81,137 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 142 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 21,422 ஆக அதிகரித்துள்ளது. இன்று 25,910 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,50,065 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாக திரிச்சூர் மாவட்டத்தில் இன்று 3,474 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் 3,456 பேருக்கும், மலப்புரத்தில் 3,166 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Tags:    

Similar News