செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் இயற்கை பொருட்களில் தயாரித்த உணவு விற்பனைக்கு திடீர் தடை

Published On 2021-08-31 07:19 GMT   |   Update On 2021-08-31 07:19 GMT
ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினசரி இலவசமாக அன்னதானம் வழங்கப்படுகிறது.
திருப்பதி:

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு மலிவு விலையில் உணவு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்வதாக தேவஸ்தானம் நேற்று அதிரடியாக அறிவித்தது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினசரி இலவசமாக அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க திட்டமிடப்பட்டது. அறங்காவலர் குழுவின் அனுமதி பெறாமல் இந்த திட்டம் தொடங்கப்படுவதால் இதனை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.

புதிய அறங்காவலர் குழுவின் தலைவராக மீண்டும் நான் தேர்வாகியுள்ளேன். ஆனால் இன்னும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

இதுபோன்ற நிலையில் தன்னிச்சையாக அதிகாரிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். எனவே ரத்து செய்கிறோம். காலம் காலமாக வழங்கப்படும் இலவச உணவு முறை தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News