செய்திகள்
தடுப்பூசி போடும் பணி (கோப்பு படம்)

பாதிப்பு விகிதம் 19.22 சதவீதம்- கேரளாவில் இன்று 32,801 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-08-27 16:19 GMT   |   Update On 2021-08-27 16:19 GMT
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
திருவனந்தபுரம்:

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் பாதிப்பு அதிக அளவிலேயே உள்ளது. மொகரம் மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி ஊரடங்கில் அரசு  தளர்வுகளை அறிவித்த நிலையில், பாதிப்பு உயர்ந்துள்ளது. எனவே, மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 32,801 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 3வது நாளாக புதிய பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது. பாதிப்பு விகிதம் 19.22 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 18,573 பேர் குணமடைந்துள்ளனர். 1,95,254 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



ஆந்திராவில் புதிய பாதிப்பு 1,515  ஆகவும், உயிரிழப்பு 10 ஆகவும் உள்ளது. 903 பேர் குணமடைந்துள்ளனர். 15,050 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இன்று 1301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 17 பேர் இறந்துள்ளனர். 1616 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 18,970 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News