செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 380 வழக்குகள்- சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

Published On 2021-08-25 11:11 GMT   |   Update On 2021-08-25 14:14 GMT
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணைகள் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுடெல்லி:

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளில் தொடர்புடைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விவரம் தொடரப்பட்ட வழக்கு விவரங்கள் இன்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. சீல் வைக்கப்பட்ட கவரில் இது சுப்ரீம் கோர்ட்டு நிதீபதிகளிடம் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக சி.பி.ஐ.க்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வக்கீல் விஜய் ஹன்சாரியா இந்த அறிக்கையை தாக்கல் செய்தார். இதன் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 36 நீதிமன்றங்களில் 380 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் பற்றிய விவரம், விசாரணை குறித்த தகவல்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளில் தீர்வு காண்பது குறைவாக இருக்கிறது. வழக்கு விசாரணைகள் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News