செய்திகள்
நித்யானந்தா

இந்த 4 நாடுகளுக்குப் போகாதீங்க...- நித்யானந்தா பரபரப்பு பேச்சு

Published On 2021-08-25 07:03 GMT   |   Update On 2021-08-25 07:03 GMT
இதுவரை சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு வந்த நித்யானந்தா, தற்போது நேரலையில் தோன்றி பக்தர்கள் மத்தியில் அருளாசி வழங்குவது புதிய காமெடி கலந்த விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:

கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தாநேற்று இரவு 10 மணிக்கு ஆன்-லைன் மூலம் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

அப்போது பின்னணியில் சாமி பாடல்கள் ஒலிக்க உடலை அசைத்து, அசைத்து நடனமாடியபடி அவர் பக்தர்களுக்கு அருள் கூறினார். அப்போது பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

மலேசியாவை சேர்ந்த பெண் பக்தர் எழுப்பிய கேள்விக்கு நித்யானந்தா பதில் கூறுகையில், இந்தியா, மலேசியா, நேபாளம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குள் யாரும் நுழையாதீர்கள்.

இந்த 4 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேறு இடங்களில் இருந்தால் அங்கேயே இருங்கள். பிரளயம் முடிந்து அனைத்தும் அடங்கும் வரை வாழ்க்கை புதுமையாய் மலரும் வரை இந்த 4 நாட்டிற்குள்ளும் யாரும் செல்லாதீர்கள். உயிரோடு வாழ்வதே இந்த ஆண்டின் உச்சபட்ச நன்மையும், சுகமும், வரமும்.



வாழ்க்கையே வரவு, மரணமே செலவு. வாழ்க்கையே இந்த ஆண்டின் நல்ல வரவு. காத்துக்கொள் உனை என கூறி உள்ளார்.

மேலும் பல்வேறு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது, இல்லாமை இல்லாமல் செய்து, நல்லவை எல்லாம் தந்து, அல்லவை எல்லாம் நீக்கி அருளுகின்றேன். என்னோடு மங்களமாய் இணைந்திருங்கள். நல்லதெல்லாம் செய்கின்றேன் எனவும் கூறினார்.

குற்ற வழக்குகளில் தேடப்படும் நிலையில், வெளிநாட்டில் பதுங்கி இருந்து இதுவரை சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு வந்த நித்யானந்தா, தற்போது நேரலையில் தோன்றி பக்தர்கள் மத்தியில் அருளாசி வழங்குவது புதிய காமெடி கலந்த விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News